பெரியார் குறித்த சர்ச்சை பேச்சு... ரஜினிக்கு எதிரான வழக்கில் நாளை தீர்ப்பு

சென்னை:


பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு பதிவு செய்யுமாறு போலீசுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கில் நாளை (மார்ச் 9) சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.


கடந்த ஜனவரி மாதம் 14ம் தேதி சென்னையில் துக்ளக் இதழின் பொன்விழா ஆண்டு விழா நடந்தது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில் 1971ம் ஆண்டு சேலத்தில் தந்தை பெரியார் நடத்திய பேரணி ஒன்றில் ராமன், சீதை ஆகியோரின் நிர்வாண உருவங்களை எடுத்துச்சென்றார்கள். செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருந்தது என்றார்.